×

பழையகோட்டை மாட்டுத்தாவணியில் ரூ.12 லட்சத்துக்கு காங்கயம் இன மாடுகள் விற்பனை

காங்கயம், டிச.7:காங்கயம் அடுத்த நத்தக்காடையூர் பழையகோட்டையில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை வாரந்தோறும் நடைபெறுகிறது. நேற்றைய சந்தையில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல், போன்ற மாவட்டங்களிலிருந்து 50 கால்நடைகள் விற்பனைக்குவந்திருந்தன. இதில் காங்கயம் இன மாடுகள் ரூ.25 ஆயிரம் முதல் அதிகபட்சமாக ரூ.60 ஆயிரம் வரை விற்பனையானது.

பசுங்கன்றுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது. காளை கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ45 ஆயிரம் வரை விற்கப்பட்டது. நேற்று நடைபெற்ற சந்தையில் 35 கால்நடைகள் ரூ.12 லட்சத்திற்கு விற்பனையானது.

Tags : Kangayam ,cattle market ,Palayakottai ,
× RELATED காங்கயம் அருகே தொன்று தொட்டு நடக்கும்...