×

சாலையை கடந்த முதியவர் ஆம்னி பஸ் மோதி பலி

ஓசூர், ஆக. 7: தர்மபுரி மாவட்டம், குமாரசாமிபேட்டையை சேர்ந்தவர் மகேந்திரன்(64). டிரைவரான இவர், ஓசூருக்கு சொந்த வேலையாக வந்திருந்தார். திங்கட்கிழமை இரவு, ஓசூர் – கிருஷ்ணகிரி சாலையில் குமுதேப்பள்ளி அருகே நடந்து சென்றபோது, அவ்வழியாக வந்த ஆம்னி பஸ் மகேந்திரன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அட்கோ போலீசார், மகேந்திரன் உடலை கைப்பற்றி, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : Hosur ,Mahendran ,Kumarasamypet ,Dharmapuri district ,Kumudepalli ,Hosur-Krishnagiri road ,Atco ,Hosur Government Hospital ,
× RELATED குறைதீர் கூட்டத்தில் வேளாண் கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு