×

ஆன்லைன் சூதாட்ட விளம்பர வழக்கில் அமலாக்கத்துறை முன் ஆஜரான நடிகர் விஜய் தேவரகொண்டா

திருமலை: ஆன்லைன் சூதாட்ட செயலிகளின் விளம்பரங்கள் தொடர்பான சர்ச்சை தெலங்கானா மாநிலத்தில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. சட்ட விரோதமாக சூதாட்ட செயலிகளை விளம்பரபடுத்தியதாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா உள்ளிட்ட 29 பிரபலங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெரும் பணமோசடி நடந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை தொடர்ந்து அமலாக்கத்துறை பலருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது. இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நேற்று நேரில் ஆஜரானார். அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. 4 மணி நேரம் நடந்த விசாரணைக்கு பிறகு வெளியே வந்த விஜய் தேவரகொண்டா நிருபர்களிடம் கூறுகையில், ‘அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு உரிய விளக்கம் கொடுத்துள்ளேன்’ என்றார்.

Tags : Vijay Deverakonda ,Enforcement Directorate ,Tirumala ,Telangana ,Prakash Raj ,Hyderabad ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது