×

ஆகஸ்ட் 31ம் தேதி சீனா செல்கிறார் பிரதமர் மோடி: எல்லைப் பிரச்சனை, இருநாட்டு உறவு குறித்து பேச வாய்ப்பு

 

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி சீனாவிற்கு அரசு முறை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2020ஆம் லடாக்கில் கால்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா ராணுவ வீரர்கள் மோதிக்கொண்டனர். இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டிருந்தது. இதனிடையே சீனாவில் வரும் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ஆம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற உள்ளது. ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க ஆகஸ்ட் 31ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி சீனா செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆக.30ம் தேதி ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி, அங்கிருந்து சீனா செல்கிறார். இந்திய – சீன எல்லையில் உள்ள கல்வானில் நடைபெற்ற மோதலுக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி சீனா செல்கிறார். தியான்ஜின் நகரில் ஆக.31, செப்.1ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பிரதமர் பங்கேற்கிறார். பிரதமரின் சீன பயணத்தில் எல்லைப் பிரச்சனை, இருநாட்டு உறவு, வர்த்தகம் குறித்து பேச வாய்ப்பு உள்ளது. மேலும் ஷாங்காய் உச்சிமாநாட்டின் போது சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் புதினுடன் சந்திப்புகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

2019-ம் ஆண்டுக்குப் பிறகு பிரதமர் மோடியின் முதல் சீனப் பயணம் இதுவாகும். அண்மையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா சென்று திரும்பிய நிலையில் உறவை சீராக்கும் முயற்சியாக மோடி பயணம் மேற்கொள்கிறார்.

Tags : Modi ,China ,Delhi ,Narendra Modi ,Galwan Valley ,Ladakh ,Shanghai Cooperation Organization Conference ,
× RELATED நடிகை பலாத்கார வழக்கு மலையாள நடிகர்...