×

“நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்” – சென்னையில் 5 நாட்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சென்னையில், “நீங்களும் ஒரு தொழிலதிபராகலாம்” தொழில் முனைவோர் மேம்பாட்டு குறித்த பயிற்சி வரும் 15.12.2025 முதல் 19.12.2025 தேதி வரை (5 நாட்கள்) காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில் தொழில்முனைவோரின் அறிமுகம் மற்றும் அடிப்படைகள், வணிக நெறிமுறைகள் & அடிப்படைகள். சந்தைப்படுத்துதல் & பிராண்டிங், மின்னணு முறையில் சந்தைப்படுத்துதல், சந்தை ஆய்வு, திட்ட அறிக்கை தயாரித்தல், நிதி மேலாண்மை, அடிப்படை கணக்குகள் ERP Tally. ஜிஎஸ்டி. இ-வே பில், சிறு வணிகம் தொடர்பான சட்டங்கள், மாநில தொழில் கொள்கை, MSME வகைப்பாடு பதிவுகளைப் பற்றி விளக்கங்கள். ஆகியவை பற்றி விளக்கப்படும்.

இப்பயிற்சியில் ஆர்வமுள்ள தொழில்முனைவோர் (ஆண்/பெண்) 18 வயதுக்கு மேற்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதி 10வது வகுப்புடன் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சியில் பங்குபெறும் பயனாளிகளுக்கு குறைந்த வாடகையில் குளிரூட்டப்பட்ட தங்கும் விடுதி உள்ளது தேவைப்படுவோர் இதற்கு விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.

இப்பயிற்சி பற்றிய கூடுதல் விவரங்களை பெற விரும்புவோர் www.editn.in என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக வேலை நாட்களில் (திங்கள் முதல் வெள்ளி வரை) காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி / கைபேசி எண்கள்.

முன்பதிவு அவசியம்:
அரசு சான்றிதழ் வழங்கப்படும்
தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்.
சிட்கோ தொழிற்பேட்டை, இடிஐஐ அலுவலக சாலை ஈக்காட்டுத்தாங்கல்,

Tags : Chennai ,Entrepreneurship Development and Innovation Institute ,Government of Tamil Nadu ,
× RELATED உயர்நீதிமன்றம் நீதிபதி ஜி.ஆர்....