×

ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்யபால் மாலிக் காலமானார்

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் முன்னாள் ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக்(79). இவர் கோவா, பீகார், மேகாலயா மற்றும் ஒடிசாவின் ஆளுநர் பதவிகளையும் வகித்தவர். இவர் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக டெல்லி ராம் மனோஹர் லோஹியா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று காலமானார்.

ஆளுநர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் முக்கியமான விவகாரங்களில் ஒன்றிய அரசை அவர் பகிரங்கமாக எதிர்த்தார். இந்நிலையில், காஷ்மீர் நீர்மின் திட்டத்தில் நடந்த ஊழல் தொடர்பாக இவர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

Tags : Jammu and Kashmir ,Governor ,Satyapal Malik ,New Delhi ,Jammu and ,Kashmir ,Goa ,Bihar ,Meghalaya ,Odisha ,Lok Sabha ,Rajya Sabha ,Delhi ,Ram Manohar Lohia Hospital ,Union government ,
× RELATED திருப்பதியில் பேனருடன் நின்ற அதிமுக...