- இந்திய கூட்டணி
- தேர்தல் ஆணையம்
- புது தில்லி
- இந்தியா
- பீகார்
- காங்கிரஸ்
- திமுகா
- ராஷ்ட்ரியா ஜனதா தலம்
- திரிணாமுல் காங்கிரஸ்
புதுடெல்லி: தேர்தல் ஆணையத்துக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் நடத்த இருந்த பேரணி வரும் 11ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு, அதன்படி வரைவு வாக்காளர் பட்டியலை கடந்த 1ம் தேதி வௌியிட்டது.ஆனால் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு காங்கிரஸ், திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதையடுத்து வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையம் நோக்கி வரும் 8ம் தேதி பேரணி நடத்த இந்தியா கூட்டணி கட்சியினர் முடிவு செய்திருந்தனர். இந்த சூழலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா நிறுவன தலைவரும், முன்னாள் முதல்வருமான சிபு சோரன் நேற்று முன்தினம் காலமானார். அவரது மறைவையடுத்து இந்தியா கூட்டணியினர் வரும் 8ம் தேதி நடத்த இருந்த பேரணியை வரும் 11ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.
