- சேலம்
- சித்தன்
- பத்ரமதுவை
- பாலமலை பஞ்சாயத்து
- கொளத்தூர் ஒன்றியம்
- மேட்டூர்
- சேலம் மாவட்டம்
- பார்த்திபன்
- அரசு பழங்குடியினர் உறைவிடப் பள்ளி
- வெள்ளையன்
- மாவட்ட திட்ட அலுவலர்
- பழங்குடியினர் நலத்துறை
- சுகந்தி பரிமளா
சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் ஒன்றியம் பாலமலை ஊராட்சி பாத்திரமடுவை சேர்ந்தவர் சித்தன். இவரது மகன் பார்த்திபன் (15). இவர், அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 30ம் தேதி காலை, இவர் நண்பர்களுடன் விளையாடினார். பின்னர் பள்ளி அருகில் உள்ள வெள்ளையன் என்பவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் குளித்தபோது பலியானார். இந்த விவகாரம் குறித்து பழங்குடியினர் நலத்துறை மாவட்ட திட்ட அலுவலர் சுகந்தி பரிமளா விசாரணை நடத்தினார். இதில், பள்ளி நேரத்தில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் அஜாக்கிரதை காரணமாக இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதனையடுத்து பணியில் இருந்த பட்டதாரி ஆசிரியர் குமார், சமையலர்கள் பாலச்சந்திரன், இளையராஜா, குப்புசாமி, தூய்மை பணியாளர் சுரேஷ் ஆகிய 5 பேரை சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
