×

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,175 கனஅடியில் இருந்து 7,769 கனஅடியாக சரிவு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,175 கனஅடியில் இருந்து 7,769 கனஅடியாக சரிந்தது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக விநாடிக்கு 18,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. டெல்டா பாசனத்துக்காக 18,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாயில் 500 கனஅடி நீரும் திறக்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.22 அடியாக சரிந்துள்ளது. நீர் இருப்பு 92.23 டிஎம்சியாக உள்ளது.

Tags : Mattur dam ,Salem ,Matour Dam ,Matur dam ,Delta ,East-West Canal ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...