×

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்..!!

சென்னை: நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், இந்த ஆட்சி முடிவதற்குள் சில முக்கிய திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க திமுக அரசு முயற்சித்து வருகிறது. சமீபத்தில் இரு முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் வருகிற ஆக.14ம் தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சர்கள் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த கூட்டத்தில் மக்கள் நலத்திட்டங்கள், தமிழக அரசின் அடுத்த கட்ட திட்டங்கள் மற்றும் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் வழங்குவது குறித்து விவாதித்து முடிவு செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் ஆணவப் படுகொலைக்கு எதிராக சிறப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Tags : Chief Minister ,Chennai ,K. ,Tamil Nadu Cabinet ,Stalin ,Tamil Nadu ,Dimuka government ,MLA ,Chennai Chief Secretariat ,Fr. K. Stalin ,
× RELATED தமிழக காவல் துறையில் காலியாக உள்ள 1,299...