- எடப்பாடி
- தூத்துக்குடி
- நெல்லை
- அஇஅதிமுக
- பொதுச்செயலர்
- எடப்பாடி பழனிசாமி
- Palayankottai
- தேவர் சிலை
- பூலி தேவர் மக்கள் முன்னேற்றக் கழகம்
- பவானி வேல்முருகன்
- தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்
- வன்னியார்
நெல்லை: . அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை பாளையங்கோட்டைக்கு பிரசாரம் செய்ய சென்றார். அப்போது நெல்ைல சந்திப்பு தேவர் சிலை அருகே பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் அதன் தலைவர் பவானி வேல்முருகன் தலைமையில் கருப்புக் கொடிகளைஏந்திக் கொண்டு எடப்பாடிக்கு எதிராக ேகாஷங்களை எழுப்பினர். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் அப்பாவிகள் பலியாக எடப்பாடியே துப்பாக்கிச் சூட்டிற்கு உத்தரவு பிறப்பித்தார் எனக்கூறியும், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு எதிர்த்தும் கோஷமிட்டபடியே எடப்பாடியின் வாகனத்தை வழிமறிக்க முயன்றனர்.
போலீசார் உடனடியாக அவர்களை ஓரமாக ஒதுக்கி, கொடிகளை பிடுங்கி சென்றனர். எடப்பாடி பழனிசாமி வாகனம் கடந்து சென்ற நிலையில், அவருக்கு பின்னால் வந்த அதிமுகவினர், அந்த அமைப்பின் நிர்வாகிகளுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
