புதுடெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா,எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: நமது தேசியக் கொடியான மூர்ணக்கொடி தியாகம், விசுவாசம் மற்றும் அமைதியின் சின்னமாகும். பிரதமர் மோடியின் வீட்டுக்கு வீடு தேசிய கொடி பிரசார இயக்கம் நாட்டு மக்களை ஒன்றிணைப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தப் பிரசாரம் இப்போது ஒவ்வொரு தனிநபருடனும் இணைந்திருக்கிறது. இந்தப் பிரசாரத்தின் மூலம் ஒவ்வொரு குடிமகனிடமும் தேசபக்தி மற்றும் தேசத்தின் மீதான அன்பு தெளிவாகத் தெரிகிறது. அனைத்து குடிமக்களும், குறிப்பாக இளைஞர்கள், தங்கள் வீடுகளில் மூவர்ணக் கொடியை ஏற்றி, மூவர்ணக் கொடியுடன் செல்பிகளைப் பதிவேற்றம் செய்யுமாறு வேண்டுகிறேன்.
