×

நேபாளம் மாநிலம் பாரா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் இந்தியர்கள் 6 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு.! 19 பேர் காயம்

நேபாளம்: நேபாளம் மாநிலம் பாரா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் இந்தியர்கள் 6 பேர் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். சாலை விபத்தில் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேபாளத்தின் பாரா மாவட்டத்தல் நடந்த சாலை விபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்மாண்டுவில் இருந்து ஜனக்பூருக்குச் பேருந்து சென்று கொண்டிருந்தது.

இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்றபோது, பாராவில் உள்ள சூரியாமை அருகே விபத்து நேர்ந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் ஒரு உதவியாளர் உட்பட மொத்தம் 27 பேர் பேருந்தில் இருந்தனர். இதில் பலரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. இதனால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. உயிரிழந்த இந்தியர்களின் உடல் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப தீவிர ஏற்பாட்டு செய்யப்பட்டு வருகிறது.

The post நேபாளம் மாநிலம் பாரா மாவட்டத்தில் நடந்த சாலை விபத்தில் இந்தியர்கள் 6 பேர் உட்பட 7 பேர் உயிரிழப்பு.! 19 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Nepal's Para district ,Indians ,Nepal ,Para district ,Dinakaran ,
× RELATED பங்குசந்தை வீழ்ச்சியால் ரூ.9 லட்சம் கோடி இழப்பு