×

நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் 5 பேர் மீது சிபிஐ துணை குற்றப்பத்திரிகை

புதுடெல்லி: நீட் வினாத்தாள் வெளியானது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. ஜூன் 23ம் தேதி முதல் இந்த வழக்கு விசாரணையை சிபிஐ மேற்கொண்டு வருகின்றது. இந்த வழக்கில் ஏற்கனவே சிபிஐ தரப்பில் 4 முறை துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று 5வது துணை குற்றப்பத்திரிகை பாட்னாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த குற்றப்பத்திரிகையில் திட்டமிட்டு தேர்வு தாள் கசிவை செயல்படுத்திய முக்கிய நபரான பொகாரோவை சேர்ந்த அமித் குமார் சிங் உட்பட 5 பேருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. நேற்று தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையையும் சேர்த்து இந்த வழக்கில் இதுவரை 45 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் நீதிமன்ற காவலில் இருக்கின்றனர்.

The post நீட் வினாத்தாள் வெளியான விவகாரம் 5 பேர் மீது சிபிஐ துணை குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.

Tags : CBI ,NEET ,New Delhi ,
× RELATED ஒன்றிய அரசு அதிகாரிகள் மீது எப்.ஐ.ஆர்...