×

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன் பேட்டி


திருச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் நீதி கிடைத்ததுபோல், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார். சென்னையில் இருந்து வந்தே பாரத் ரயிலில் இன்று திருச்சி வந்த அவர் ரயில் நிலையத்தில் அளித்த பேட்டி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைத்திருக்கிறது. நல்ல தீர்ப்பு வந்துள்ளது. கொடநாடு கொலை வழக்கிலும் எங்களை பொறுத்தவரை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

தேர்தல் வருவதற்கு இன்னும் நாட்கள் இருக்கிறது. தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து பேசுவோம். பாஜ மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு விரைவில் வேறு பதவி கொடுப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

The post கொடநாடு கொலை, கொள்ளை வழக்கிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்: நயினார் நாகேந்திரன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Kodanad ,Nainar Nagendran ,Trichy ,Pollachi ,BJP ,president ,Vande Bharat ,Chennai… ,
× RELATED மாமல்லபுரம் கடற்கரையில் 10 கி.மீ...