×

முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான வழக்கு.. போலீஸ் நடுநிலையான அமைப்பாக செயல்பட வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: காவல்துறையினர் நடுநிலையான அமைப்பாக செயல்பட வேண்டும்; இது ஒரு ஜனநாயக நாடு என மதுரை முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரையில் உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு ஜூன் 10ம் தேதி நடைபெறுகிறது. மாநாட்டில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து ஜூன் 22 வரை வழிபாடு செய்ய அனுமதி கோரி ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட காவல் உதவி கண்காணிப்பாளர் பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

The post முருக பக்தர்கள் மாநாடு தொடர்பான வழக்கு.. போலீஸ் நடுநிலையான அமைப்பாக செயல்பட வேண்டும்: ஐகோர்ட் கிளை கருத்து appeared first on Dinakaran.

Tags : Muruga ,Devotees Conference ,iCourt ,Madurai ,High Court ,Madurai Muruga ,Devotes' Conference ,Amma Didal ,Madura ,Dinakaran ,
× RELATED காவிரி குறுக்கே மேகதாது அணை கட்ட தமிழக...