×

முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் 16ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு

கொழும்பு: இலங்கையில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் நிறைவடைந்த 16ம் ஆண்டு நினைவு தினத்தை இலங்கை தமிழர்கள் நேற்று அனுசரித்தனர். இலங்கையில் நடந்த உள்நாட்டு போர் கடந்த 2009ம் ஆண்டு மே 18ம் தேதி முடிவுக்கு வந்ததாக அந்நாட்டு ராணுவம் அறிவித்தது. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் தஞ்சமடைந்த ஏராளமான தமிழர்கள் இறுதிப்போரில் கொல்லப்பட்டனர்.

இதன் 16ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. முள்ளிவாய்க்காலில் ஏராளமான தமிழர்கள் கூடி அஞ்சலி செலுத்தினர். கொழும்பு, மட்டகளப்பு உள்ளிட்ட பல இடங்களில் இலங்கை தமிழர்கள் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். இலங்கை அரசு சார்பில் இன்று போரில் உயிரிழந்தவர்கள் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் அதிபர் அனுர குமார திசநாயக பங்கேற்கிறார்.

The post முள்ளிவாய்க்கால் இறுதிப்போர் 16ம் ஆண்டு நினைவுதினம் அனுசரிப்பு appeared first on Dinakaran.

Tags : HEDGEHOG ,ANNIVERSARY ,Colombo ,Tamils ,Final Battle of Mulliwai ,Sri Lanka ,Sri Lankan Civil War ,Sri Lankan Army ,Dinakaran ,
× RELATED இந்திய பொருட்கள் மீதான வரியை நீக்கக்...