×

நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலக நாடுகளை அழைக்கும் சீனா; இணைய விரும்பும் நாடுகள் டிசம்பருக்குள் அணுகலாம்..!!

பெய்ஜிங்: நிலவு குறித்த ஆராய்ச்சியில் இணைந்து செயல்பட உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக chang e – 8 விண்கலத்தை 2028ம் ஆண்டு விண்ணில் செலுத்த சீனா திட்டமிட்டுள்ளது. நிலவு ஆராய்ச்சியில் சீனாவின் 4வது கட்ட ஆராய்ச்சி இதுவாகும். இதன் மூலம் நிலவின் மேற்பரப்பு குறித்த ஆராய்ச்சி, நிலவில் இதுவரை எடுக்கப்படாத இடத்தில் இருந்து மாதிரிகளை கொண்டுவந்து ஆய்வு உள்ளிட்டவற்றை நடத்த சீனா திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் இந்த திட்டத்தில் இணைந்து செயல்பட உலக நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுத்திருக்கிறது. நடப்பாண்டு இறுதிக்குள் இதில் இணைய விரும்பும் நாடுகள் தங்களை அணுகலாம் என சீனா தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் எந்த நாட்டுடன் இணைந்து செயல்படுவது என்பது பற்றி அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post நிலவில் ஆராய்ச்சி மேற்கொள்ள உலக நாடுகளை அழைக்கும் சீனா; இணைய விரும்பும் நாடுகள் டிசம்பருக்குள் அணுகலாம்..!! appeared first on Dinakaran.

Tags : China ,Beijing ,
× RELATED சீனாவில் வெள்ளம் 47 பேர் உயிரிழப்பு