×

நிலவில் சாதகமாக உள்ள அனைத்து சமிக்ஞைகளும் பதிவு ஏற்றம்: இஸ்ரோ தகவல்

பெங்களூரு: நிலவில் சாதகமாக உள்ள அனைத்து சமிக்ஞைகளும் பதிவு ஏற்றம் செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. லேண்டரில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 3 மணிக்கு லேண்டரில் இருந்து வரும் தரவுகளை பொறுத்து சமிக்ஞைகள் செயல்படுத்தப்படும். சமிக்ஞைகளை செயல்படுத்த இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என இஸ்ரோ தெரிவித்திருக்கிறது.

சந்திரயான்-3: இன்று மாலை 6.04 மணிக்கு லேண்டர் நிலவில் தரையிறங்குகிறது

நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றன. லேண்டரை தரையிறக்க பயன்படுத்தப்படும் அனைத்து கருவிகளும் தொடர்ந்து சோதனை செய்யப்பட்டு வருகிறது. நிலவில் தரையிறங்கும் நடவடிக்கை இன்று மாலை 5.20 முதல் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. நிலவின் தரையை நோக்கி வினாடிக்கு 1.68 கி.மீ. வேகத்தில் லேண்டர் செல்லும். நிலவின் ஈர்ப்பு விசை முக்கியம் என்பதால் லேண்டரின் வேகத்தை கண்காணித்து கட்டுப்படுத்துவதில் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

The post நிலவில் சாதகமாக உள்ள அனைத்து சமிக்ஞைகளும் பதிவு ஏற்றம்: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : Moon ,ISRO ,BENGALURU ,Dinakaran ,
× RELATED நிலவின் தென்துருவப் பகுதியில்...