×

பணமோசடி வழக்கு உ.பி. எண்ணெய் நிறுவனத்தின் ரூ.814கோடி சொத்து முடக்கம்

புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டஜேவிஎல் அக்ரோ லிமிடெட் நிறுவனமானது எண்ணெய் உற்பத்தி மற்றும் விற்பனை செய்து வந்தது. இந்த நிறுவனம் போலி நிதிநிலை அறிக்கைகளை வங்கிகளிடம் சமர்பித்து கடனை பெற்றுதனது பல்வேறு நிறுவனங்களுக்கும் வழங்கியுள்ளது. இதற்காக நிறுவனத்தின் உரிமையாளர், போலியான இயக்குனர்களை நியமித்துள்ளார். இது குறித்து நிறுவனத்தின் உரிமையாளர்கள் சத்ய நாராயன் மற்றும் ஆதர்ஷ் ஆகியோர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றது. இந்த வழக்கின் அடிப்படையில் பணமோசடி குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகளும் விசாரணையை தொடங்கினார்கள். கடந்த மாதம் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து நிறுவனத்துக்கு சொந்தமாக வாரணாசி, பீகாரின் ரோதாஸ், டெல்லியின் பாலம் மற்றும் மகாராஷ்டிராவின் ராய்கரில் உள்ள சுமார் 520 ஏக்கர் நிலத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். இதன் மொத்த மதிப்பு ரூ.814 கோடியாகும்.

The post பணமோசடி வழக்கு உ.பி. எண்ணெய் நிறுவனத்தின் ரூ.814கோடி சொத்து முடக்கம் appeared first on Dinakaran.

Tags : U.P. ,NEW DELHI ,JVL Agro Limited ,Varanasi, Uttar Pradesh ,Dinakaran ,
× RELATED தொடர் மழையால் சாகுபடி பாதிப்பு; வெங்காயம், உருளைக்கிழங்கு விலை 50% உயர்வு