×

மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல்

புதுடெல்லி: இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கடந்த மார்ச் மாதம் மொபைல் எண் போர்ட்டபிலிட்டி(9வது திருத்தம்) விதிமுறைகளை வெளியிட்டது. இது ஜூலை 1ம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்திருந்தது. டிராய் புதிய விதிமுறையின்படி சிம் கார்டு மாற்றுதல்,தொலைந்து போன அல்லது வேலை செய்யாத சிம் கார்டுக்கு பதில் புதிய கார்டை பெறுவதற்கான செயல்முறையாகும். இந்த விதியின்படி பயனர்கள் மொபைல் எண் போர்ட்டபிலிட்டி வசதியை தேர்வு செய்யலாம். இது ஒரு சேவை வழங்குனரிடம் இருந்து இன்னொரு சேவை வழங்குனருக்கு மாறுகையில் மொபைல் எண்ணை தக்க வைத்து கொள்ள அனுமதிக்கிறது.

நாளை அறிமுகம் ஆகும் திருத்த விதிமுறைகள் மூலம் கூடுதல் நிபந்தனையை டிராய் அறிமுகப்படுத்தியுள்ளது. சிம் மாற்றப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களுக்குள் முன்பு மாற்றப்பட்டது. தற்போது அது 7 நாளாக குறைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் 7 நாட்களுக்கு முன் மொபைல் எண்ணை மாற்றுவதற்கு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தால்,தனித்துவ போர்ட்டிங் கோட் ஒதுக்கப்படக்கூடாது என்று டிராய் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை தடுக்க இந்த புதிய விதிகளை டிராய் அமல்படுத்துகிறது.

The post மொபைல் சிம் கார்டு மாற்ற புதிய விதிகள் நாளை அமல் appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Telecommunications Regulatory Commission of India ,Troy ,Dinakaran ,
× RELATED நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக...