×

விழுப்புரம் அருகே மாயமான இளைஞர் வாலிபால் நெட் கம்பத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு: போலீசார் தீவிர விசாரணை

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மாயமான இளைஞர் ஒருவர் வாலிபால் நெட் கம்பத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கிறது. செஞ்சி அடுத்த காரை கிராமத்தை சேர்ந்தவர் தணிகைவேல் 20 வயதான அவர் கட்டடத் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளர்.

சம்பவத்தன்று வீட்டில் தூங்கி கொண்டிருந்த தணிகைவேல் திடீரென மாயமானது கூறப்படுகிறது, இதனிடையே கிராமத்தில் உள்ள மைதானத்தில் வாலிபால் நெட் கட்டப்படும் கம்பத்தில் இளைஞர் சட்டையால் துகிட்ட தொங்கியப்ப்படி சடலமாக மீட்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக குற்றச்சாட்டு முன்வைத்திருக்கும் உறவினர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தியதால் பரபரப்பானது. இந்நிலையில் சந்தேகம் மரணம் என்று வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post விழுப்புரம் அருகே மாயமான இளைஞர் வாலிபால் நெட் கம்பத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Dinakaran ,
× RELATED வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை வீடியோ...