மும்பை: இந்திய பங்குச்சந்தைகள் நேற்று இறக்கத்துடன் துவங்கின. மும்பை பங்குச்சந்தை குறியீடு சென்செக்ஸ் 1,272 புள்ளிகள் சரிந்து, 84,300 புள்ளிகளில் நிறைவடைந்தது. இதுபோல், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிப்டி 368 புள்ளிகள் சரிந்து 25,811 புள்ளிகளானது. லெபனானில் வான் வழி தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் தரை வழி தாக்குதலுக்கு யாராகி வரும் நிலையில் மத்திய கிழக்கு நாடுகளில் போர் தீவிரம் அடைந்ததால் பதற்றம் அதிகரிப்பு, ஜப்பானிய யென் வட்டி விகிதம் உயரும் என்ற அச்சம் போன்ற பல்வேறு காரணங்களால் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்தன. இதன் தாக்கம் இந்திய பங்குச்சந்தையிலும் எதிரொலித்தது. நேற்று ஒரே நாளில் பங்குகளின் மதிப்பு ரூ.3.57 லட்சம் கோடி சரிந்தது, முதலீட்டாளர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
The post மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகரிப்பு: பங்குச்சந்தையில் ஒரே நாளில் ரூ.3.57 லட்சம் கோடி இழப்பு appeared first on Dinakaran.