×

மேகாலயா ஹனிமூன் கொலையில் ஆதாரம் அழிப்பு; இந்தூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது

இந்தூர்: இந்தூரை சேர்ந்த தொழிலதிபர் ராஜா ரகுவன்ஷி தனது மனைவி சோனத்துடன் கடந்த மாதம் மேகாலயாவுக்கு தேனிலவு சென்றிருந்தார். அப்போது ராஜா ரகுவன்ஷி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சோனம், அவரது காதலன் ராஜ் குஷ்வாஹா, அவரது 3 நண்பர்களான விஷால் சவுகான், ஆகாஷ் ராஜ்புத், ஆனந்த் குர்மி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கொலையில் முக்கிய ஆதாரத்தை அழித்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் ஷிலோம் ஜேம்ஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து இந்தூர் கூடுதல் போலீஸ் ஆணையர் ராஜேஷ் தண்டோட்டியா கூறுகையில்,‘‘தேவாஸ் நாகாவில் உள்ள ஒரு வீட்டை விஷால் சவுகானுக்கு ஜேம்ஸ் வாடகைக்கு விட்டுள்ளார். அந்த வீட்டில் சோனம் தங்கியிருந்துள்ளார். சோனமிடம் இருந்த பை வழக்கில் முக்கிய ஆதாரமாக இருந்தது. ஆனால், சோனமின் பையை ஜேம்ஸ் மறைத்து உள்ளார். இதையடுத்து அவரை மேகாலயா போலீசார் கைது செய்தனர்’’ என்றார்.

The post மேகாலயா ஹனிமூன் கொலையில் ஆதாரம் அழிப்பு; இந்தூரை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Meghalaya Honeymoon ,Indore ,Raja Ragwanshi ,Meghalaya ,Sonana ,Sonam ,Raj Kushwaha ,Vishal ,
× RELATED பிரதமர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் வாலிபர் கைது