×

மாஸ்டர்ஸ் கோப்பை ஹாக்கி கர்நாடகா கோல் மழையில் கரைந்த மகாராஷ்டிரா; 12 கோல் வாங்கி படுதோல்வி

சென்னை: சென்னையில் நடந்து வரும் முதலாவது மாஸ்டர்ஸ் ஹாக்கிப் போட்டியின் மகளிர் பிரிவில் நேற்று, மகாராஷ்டிராஅணிக்கு எதிராக கர்நாடகா அணி 12 கோல் அடித்து அபார வெற்றி பெற்றது. அகில இந்திய அளவிலான முதலாவது மாஸ்டர்ஸ் கோப்ைப ஹாக்கிப் போட்டி சென்னையில் நடக்கிறது. அதில் பெண்கள் ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் நேற்று மகாராஷ்டிரா-கர்நாடகா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய கர்நாடகா ஆட்டம் தொடங்கிய 2வது, 4வது நிமிடங்களில் அடுத்தடுத்து கோலடித்து அசத்தினர். இந்த அசத்தல் தொடர்ந்ததால் முதல் பாதியில் கர்நாடகா 6-0 என்ற கோல் கணக்கில் வலுவான முன்னிலைப் பெற்றது.

தொடர்ந்து 2வது பாதியிலும் ஆதிக்கம் செலுத்திய கர்நாடகா ஆட்டத்தின் முடிவில் 12-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றியை ருசித்தது.
அந்த அணியில் பிரேமா 4, மானசா 3, உஷா 2, கேப்டன் கிருத்திகா, நீலம்மா, ஜோஸ்பின் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
ஏ பிரிவின் மற்றொரு ஆட்டத்தில் இமாச்சல் பிரதேசம் 4-1 என்ற கோல் கணக்கில் கேரளாவை வீழ்த்தியது.

 

The post மாஸ்டர்ஸ் கோப்பை ஹாக்கி கர்நாடகா கோல் மழையில் கரைந்த மகாராஷ்டிரா; 12 கோல் வாங்கி படுதோல்வி appeared first on Dinakaran.

Tags : Masters Cup Hockey ,Maharashtra ,Karnataka ,Chennai ,Masters Hockey ,All-India Masters Cup Hockey ,Chennai… ,Dinakaran ,
× RELATED யு-19 ஆசிய கோப்பை ஓடிஐ: ஆட்டிப்படைத்த ஆப்கானிஸ்தான்; மோசமாக தோற்ற நேபாளம்