×

மராட்டியத்தில் இந்தி படிப்பது கட்டாயமல்ல: முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் விளக்கம்

மும்பை: மராட்டியத்தில் இந்தி படிப்பது கட்டாயமல்ல என முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் விளக்கம் அளித்துள்ளார்.மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றும் திட்டத்தை ஃபட்னாவிஸ் அரசாங்கம் அறிவித்தது. இந்த விதி 2025-26 கல்வியாண்டில் தொடங்கி 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்குப் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் மராட்டியத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரை 3-வது மொழியாக இந்தியை கட்டாயமாக்கியதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. எதிர்க்கட்சிகள், மொழிக் குழு உள்ளிட்டவை கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவேண்டாம் என மராட்டிய கல்வி ஆராய்ச்சி கவுன்சிலும் எதிர்ப்பு தெரிவித்தது. “மும்மொழிக் கொள்கை அறிவியல்பூர்வமானது கிடையாது. 12ம் வகுப்பு வரை இருமொழிக் கொள்கையை பின்பற்ற வேண்டும். 3வது மொழியை கற்பது மாணவர்களுக்கு சுமையாக அமையும். ஒரு மொழியைக் கூட சரியாக கற்க முடியாத சூழல் உருவாகும் என எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில், இந்தி திணிப்பு” குறித்த ஊகங்களுக்குத் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் விளக்கமளித்தார். அதில், மராட்டிய மாநிலத்தில் மராத்தி மட்டுமே கட்டாயம் என்றும் தேவேந்திர பட்னவிஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மராத்தியை தவிர வேறு எந்த மொழியும் கட்டாயமில்லை. ஒரு வகுப்பில் குறைந்தபட்சம் 20 மாணவர்கள் விரும்பினால் மட்டுமே இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் 3வது மொழியாக கற்பிக்கப்படும், இவற்றைத் தவிர மற்ற மொழிகளை கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை” மகராஷ்டிராவில் 1-5 வகுப்பு மாணவர்களுக்கு 3வது மொழியாக இந்தி கட்டாயமில்லை என்பதற்கு அம்மாநில முதல்வர் பட்னவிஸ் அளித்துள்ள விளக்கத்தால் குழப்பம் ஏற்பட்டது. கடும் எதிர்ப்பை அடுத்து மராத்தி மொழிக்கு மாற்றாக இந்தி கொண்டுவரப்படவில்லை என விளக்கம் அளித்தார்.

The post மராட்டியத்தில் இந்தி படிப்பது கட்டாயமல்ல: முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Devendra Budnavis ,Mumbai ,Fadnavis government ,
× RELATED அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்;...