×

மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்: பலாத்காரம் செய்து பெண் எரித்துக்கொலை; இன்னொரு பெண் சுட்டுக்கொலை

இம்பால்: மணிப்பூரில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்து எரித்து கொன்ற அவலம் அரங்கேறி உள்ளது. மேலும் ஒரு பெண் சுட்டு கொல்லப்பட்டார். மணிப்பூரில் கடந்த ஆண்டு மே 3ம் தேதி ஏற்பட்ட இனக்கலவரம் இன்னும் முடிவுக்கு வராமல் நீடிக்கிறது. அவ்வப்போது துப்பாக்கி சூடு சம்பவங்களும் நடக்கின்றன. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை(7ம் தேதி) இரவு ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள ஜைரோன் ஹ்மார் கிராமத்தில் மர்ம நபர்கள் 31 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து உயிருடன் எரித்து கொன்றனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று பிஷ்ணுபூர் மாவட்டத்தில் நெல் வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண் மீது மலைப்பகுதியில் இருந்து தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அடுத்தடுத்து இரண்டு நாள்களுக்குள் நடந்த இந்த அவலங்களால் மணிப்பூரில் பதற்றம் நிலவுகிறது.

The post மணிப்பூரில் மீண்டும் பயங்கரம்: பலாத்காரம் செய்து பெண் எரித்துக்கொலை; இன்னொரு பெண் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Imphal ,Manipur ,
× RELATED மணிப்பூரில் தீவிரவாத முகாம்கள் அழிப்பு