- முருகன் மாநாடு
- மகாராஷ்டிரா
- ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
- மதுரை
- முருகன்
- இந்து முன்னணி
- சுற்று சாலை
- கவர்னர்
- ராதாகிருஷ்ணன்
மதுரை: ‘மகாராஷ்டிராவில் முருகன் மாநாடு நடத்த உறுதுணையாக இருப்பேன்’ என அம்மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரை, ரிங்ரோடு திடலில் இந்து முன்னணி சார்பில் இன்று முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது. மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனும் மாநாடு திடலை பார்வையிட்டு தரிசனம் செய்தார். பின்னர் அவர் கூறியதாவது, ‘‘தமிழ் மண்ணில் முருகனின் புகழ் தன்னிகரற்றது. அறுபடை முருகனையும் ஒரே இடத்தில் காண்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆன்மிகத்துடன் அரசியல் கலந்து இருக்கிறது. இந்த மாநாடு தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் முருகன் மாநாடு நடத்த உறுதுணையாக இருப்பேன்’’ என்றார்.
The post மகாராஷ்டிராவில் முருகன் மாநாடு: ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேட்டி appeared first on Dinakaran.
