×

நெல்லையை சேர்ந்தவரின் நுரையீரல் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவரின் உயிரை காப்பாற்றியது: 4 மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட உறுப்பு

சென்னை: நெல்லையை சேர்ந்தவரின் நுரையீரல் சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 73 வயதான முதியவரின் உயிரை காப்பாற்றியுள்ளது. மேலும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர். நெல்லையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 52 வயதுடைய ஆண் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். மூளைச்சாவு அடைந்த அந்த நபரின் நுரையீரலை தானமாக வழங்க அவரின் உறவினர்கள் முடிவு ெசய்தனர். இதையடுத்து காவேரி மருத்துவமனையில் நுரையீரல் மாற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 73 வயது முதியவர்க்கு அந்த நபரின் நுரையீரலை பொருத்த மருத்துவக் குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் அதிகாலை 5.45 மணிக்கு மருத்துவக் குழுவினர் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு சென்ற மருத்துவக்குழுவினர் தூத்துக்குடி சென்றடைந்தனர்.

தூத்துக்குடியில் இறங்கிய மருத்துவக் குழுவினர் சாலை வழியாக நெல்லைக்கு சென்றனர். இறந்தவரின் உடல் உடனடியாக அறுவை சிகிச்சை அரங்கிற்கு மாற்றப்பட்டு நுரையீரல் எடுக்கப்பட்டது. பின்னர் தயார் நிலையில் இருந்த வாகனத்தில் மருத்துவக் குழுவினர் புறப்பட்டு போக்குவரத்துக்கு தயார் செய்யப்பட்டது. 4 மணி நேரத்தில் உடல் உறுப்பு சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு மாற்று அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இதனால் 73 வயது முதியவருக்கு புதிய வாழ்க்கை கிடைத்தது என்று காவேரி மருத்துவமனை டாக்டர்கள் தகவல் தெரிவித்தனர்.

The post நெல்லையை சேர்ந்தவரின் நுரையீரல் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதியவரின் உயிரை காப்பாற்றியது: 4 மணி நேரத்தில் சென்னைக்கு கொண்டு வரப்பட்ட உறுப்பு appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Hospital ,Chennai ,Nellai ,Cauvery Hospital ,Chennai.… ,
× RELATED காவிரியில் இருந்து அதிக திறன் கொண்ட...