×

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் வருகிற 17ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு!

டெல்லி: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் வருகிற 17ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இது வலுப்பெற்று மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, தென்தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, திண்டுக்கல், திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

The post தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவுகள் பகுதியில் வருகிற 17ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Southeast Arabian Sea ,Lakshteev region ,DELHI ,SOUTHEASTERN ARABIAN GULF ,LAKSHDEVA REGION ,17TH ,Southeast Arabian Peninsula ,Lakshdeviyawah region ,
× RELATED பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த...