- அமித் ஷா
- அகிலேஷ்
- புது தில்லி
- ஐரோப்பிய ஒன்றிய
- அமைச்சர்
- சமாஜ்வாடி
- அகிலேஷ் யாதவ்
- Vakpu
- லலகவா
- சமாஜ்வாடி கட்சி
- மக்களவை
- தின மலர்
புதுடெல்லி: மக்களவையில் சபாநாயகரின் உரிமைகள் பறிக்கப்படுவதாக சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றஞ்சாட்டிய நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதனை மறுத்துள்ளார். மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா மீதான விவாதத்தின்போது பேசிய சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ்யாதவ் சபாநாயகர் ஓம் பிர்லாவை நோக்கி, உங்களது உரிமைகள் மற்றும் எங்களது உரிமைகளும் குறைக்கப்படுகின்றது. நீங்கள் ஜனநாயகத்தின் நீதிபதி என்று நான் கூறியிருந்தேன். உங்களின் சில உரிமைகள் பறிக்கப்படுவதாக நான் கேள்விப்பட்டேன்.
உங்களுக்காக நாங்கள் போராட வேண்டும் என்றார். அப்போது உடனடியாக குறுக்கிட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நீங்கள் சபாநாயகரை அவமதித்துவிட்டீர்கள். சபாநாயகரின் உரிமைகள் எதிர்க்கட்சியை மட்டும் சார்ந்தது கிடையாது. ஒட்டுமொத்த அவைக்குமானது. சுற்றிவளைத்து பேசாதீர்கள். நீங்கள் சபாநாயகரின் உரிமைகளின் பாதுகாவலர் இல்லை என்றார். அதன்பின்னர் பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, உறுப்பினர்கள் யாரும் சபாநாயகர் குறித்து கருத்து தெரிவிக்கக்கூடாது. இது எனது எதிர்பார்ப்பு. சபாநாயகரை குறித்து தனிப்பட்ட கருத்து எதையும் கூறக்கூடாது என்றார்.
The post மக்களவை சபாநாயகரின் உரிமைகள் பறிக்கப்படுகிறது: அகிலேஷ் பேச்சால் அமித் ஷா கோபம் appeared first on Dinakaran.