×

ராகுலின் முகத்தில் கருப்பு மை பூசுவோம்: உத்தவ் சிவசேனா மிரட்டல்


மும்பை: ராகுல் காந்தியின் முகத்தில் கருப்பு மை பூசுவோம் என்று உத்தவ் சிவசேனா கட்சி நிர்வாகி மிரட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியும், உத்தவ் தாக்கரே தலைமையிலான உத்தவ் சிவசேனா கட்சியும் தேசிய அளவில் இந்தியா கூட்டணி மற்றும் மகாராஷ்டிர அளவில் மகா விகாஸ் அகாடி கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இதற்கிடையே, எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி, சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்க்கரை ‘மாபிவீர்’ (மன்னிப்பு கேட்கும் வீரர்) என்று விமர்சித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வீர சாவர்க்கர் பிறந்தநாளை முன்னிட்டு உத்தவ் சிவசேனா கட்சியின் நாசிக் நகர பிரிவு துணைத்தலைவர் பாலா தராதே கூறுகையில், ‘சாவர்க்கரை பற்றிய ராகுல் காந்தியின் கருத்துகள் அவமானகரமானது. நாங்கள் கடுமையாக கண்டிக்கிறோம். ராகுல் காந்தி, நாசிக் வந்தால் அவரது முகத்தில் கருப்பு மை பூசுவோம். அதை செய்ய முடியாவிட்டால், அவரது வாகன பேரணி மீது கற்களை வீசுவோம். மகா விகாஸ் அகாடி கூட்டணியின் எதிர்காலம் என்னவாக இருந்தாலும், அதைப்பற்றி கவலை இல்லை’ என்றார்.

The post ராகுலின் முகத்தில் கருப்பு மை பூசுவோம்: உத்தவ் சிவசேனா மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Uddhav ,Shiv Sena ,Mumbai ,Uddhav Shiv Sena ,Congress party ,Uddhav Shiv Sena party ,Uddhav Thackeray ,Bharatiya Janata Party ,Maha Vikas Party ,Maharashtra ,Uddhav Shiv ,Sena ,Dinakaran ,
× RELATED கேரள உள்ளாட்சித் தேர்தல் : அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை