×

சிறுத்தை நடமாட்டம் எதிரொலி: திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு

திருமலை: சிறுத்தை நடமாட்டம் காரணமாக திருப்பதி மலைப்பாதையில் நேற்று முதல் பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேவஸ்தான அதிகாரிகள் கூறுகையில், ‘இதுவரை அலிபிரி நடைபாதையில் பக்தர்கள் நடந்துசெல்ல எவ்வித கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் தற்போது சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளதால் சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளோம்.

இந்த விதிமுறைகள் இன்று(நேற்று) முதல் அமலுக்கு வந்தது. அதன்படி அதிகாலை 5 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே எவ்வித கட்டுப்பாடு இன்றி தங்கள் குழந்தைகள் உள்ளிட்டோருடன் பக்தர்கள் அலிபிரி வழியாக திருமலைக்கு செல்லலாம். ஆனால் பிற்பகல் 2 மணிக்கு பிறகு 70 முதல் 100 பக்தர்கள் வரை கூட்டம் கூட்டமாக ஒருங்கிணைத்து மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டும். அதேவேளையில் பிற்பகல் 2 மணிக்கு பிறகு 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகள் மலைப்பாதையில் செல்ல அனுமதி இல்லை.

இரவு 9.30 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மலைப்பாதையில் நடந்து செல்ல யாருக்கும் அனுமதி இல்லை.’ என்றனர். பக்தர்களை பாதுகாக்க ஸ்மார்ட் ஸ்டிக்: திருப்பதியில் கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ள வனத்துறையினருக்கு ஸ்மார்ட் ஸ்டிக் வழங்கப்பட்டுள்ளது. அதில், அதிக சத்தம் எழுப்பும் ஸ்பீக்கர் உள்ளது. விலங்குகள் தாக்க முயற்சித்தால், மின்சார ஷாக் கொடுத்து விரட்டியடிக்கும் வசதியும் உள்ளது.

The post சிறுத்தை நடமாட்டம் எதிரொலி: திருப்பதி மலைப்பாதையில் பக்தர்களுக்கு கட்டுப்பாடு appeared first on Dinakaran.

Tags : THIRUPATHI MOUNTAIN PATH ,Thirumalai ,Tirupathi mountain road ,Devastana ,Alibri pavement ,Tirupathi Mountain ,
× RELATED கேரள உள்ளாட்சித் தேர்தல் : அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை