×

கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இன்று முதல் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை

கொடைக்கானல்: கொடைக்கானல் மலைப்பகுதிகளில் நில அதிர்வுகள், நிலச்சரிவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் கொடைக்கானல் மலைப்பகுதி முழுவதும் ஒரு பாதுகாக்கப்பட்ட மலைப்பகுதியாக கருதப்பட்டுவருகிறது. இதன்காரணமாகவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னறே இந்த பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், சட்டவிரோதமாக கொடைக்கானல் பகுதிகளில் ஜேசிபி, கிட்டாச்சி மற்றும் கப்பரசர் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு கடந்தவாரம் கோட்டாச்சியர் சர்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அதில் கொடைக்கானலில் பொக்கலைன் இயந்திரங்கள் பயன்படுத்தக்கூடாது. ஜூலை 1-ம் தேதிக்குள் அதுபோன்ற வாகனங்கள் அனைத்தும் கொடைக்கானல் மலையில் இருந்து கீழ இறக்கிருக்க வேண்டும் என கூறியிருந்தார். அதனடிப்படையில் இது அமலுக்கு வருகிறது. மேலும் மிக அவசிய தேவைகளுக்கு அரசு பணிக்காக பயன்படுத்தினால் கூட மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி வாங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறி பொக்லைன் மற்றும் கனரக வாகனங்களை பயன்படுத்தினாலோ அல்லது வைத்திருந்தாலோ 2 ஆண்டுகள் சிறை அல்லது ரூ.25,000 அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு துணை செல்லும் அதிகாரிகள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தடுத்த கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை வருவாய்த்துறையினர் மட்டுமே ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது கொடைக்கானலில் இருக்க கூடிய அனைத்து துறை அதிகாரிகளை கொண்டு கண்காணிப்பு குழு அமைக்கப்படும். அந்த குழு மூலமாக அனைத்து துறை அதிகாரிகளும் இதனை கண்காணிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானல் மலைப்பகுதிகளில் இன்று முதல் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Kodaikanal hilly region ,JCB ,Dinakaran ,
× RELATED அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்;...