![]()
கேரளா: கேரளா மாநிலம் திருவனந்தபுரம் அருகே பயணிகளுடன் சென்ற கேரள அரசுப் பேருந்து தீடீரென்று தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளமாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள ஆட்டின்கள்லிலிருந்து இன்று காலை திருவனந்தபுரம் நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து சென்று கொண்டிருந்தது. இச்சமயத்தில் செண்பகமங்கலம் பகுதியில் வந்து கொண்டிருக்கும் போது பேருந்தின் இன்ஜின் பகுதியில் புகை வருவதை பார்த்த பேருந்தின் ஓட்டுநர் உடனே பேருந்தை நிறுத்தி பயணிகளை வெளியேற்றினார்.
பேருந்தில் வந்த புகையானது தீபற்ற ஆரம்பித்தது. இந்நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பேருந்து ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பயணிகள் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர். தொடர்ந்து தீயணைப்பு துறையினர் பேருந்தின் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அருகில் இருந்த மக்களும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து தீ பிடித்து எரிந்ததால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.
