×

கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்கஇன்னும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும்: ஒன்றிய அமைச்சர் பேட்டி

சென்னை: கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும் என்று ஒன்றிய அமைச்சர் கூறியுள்ளார். பாஜக 11 ஆண்டு சாதனை பற்றி தமிழக பாஜக மாநில தலைமையகமான கமலாலயத்தில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்க இன்னும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும். அகழாய்வு பணிகளுக்கு அமர்த்தப்படுபவர்கள் பிராந்திய உணர்வுகளை தூண்ட முயற்சிக்கின்றனர்” என்றார். பேட்டியின் போது தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

The post கீழடி அகழாய்வு முடிவுகளை அங்கீகரிக்கஇன்னும் அறிவியல்பூர்வமான ஆய்வுகள், முடிவுகள் வேண்டும்: ஒன்றிய அமைச்சர் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Keezhadi ,Union ,Chennai ,Union Minister ,Gajendra Singh Shekhawat ,BJP ,Tamil Nadu ,Kamalalayam ,
× RELATED தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு சேவை...