×

JBS குழுமம் சார்பில் துபாயில் வணிக மேலாண்மை புதிய கிளையைத் திறந்து வைத்தார் : தென்னிந்திய நடிகை ஷம்னா காசிம்

துபாய்: வணிக அமைப்பு சேவைகளில் 25 ஆண்டுகால புகழ்பெற்ற JBS குழுமம் சார்பில் துபாயில் அல் மம்சாரில் உள்ள செஞ்சுரி மாலில் வணிக மேலாண்மை புதிய கிளையைத் திறக்கப்பட்டது. JBS குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஷானித் ஆசிஃபாலியின் தலைமையில் நடைபெற்ற இந்த திறப்பு விழாவில், தென்னிந்திய நடிகை ஷம்னா காசிம் (பூர்ணா) சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வணிக நிறுவனத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்

இந்த நிகழ்வில் அகமது பெட்வாவி, அப்துல் அஜீஸ், சுல்பிகர் அலி, ராகுல் பாப்பி மற்றும் முஹம்மது சாதிக் உள்ளிட்ட தொழிலதிபர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். புதிதாக திறக்கப்பட்ட வணிக மேலாண்மை அலுவலகத்தில், துபாய் பொருளாதாரத்துறை சேவை, குடிவரவு சேவை,எமிரேட்ஸ் ஐடி தட்டச்சு சேவை, துபாய் நகராட்சி ஆன்லைன் சேவை உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய கிளை முழு அளவிலான அரசு மற்றும் அரசு சாரா ஆவண அனுமதி சேவைகளை வழங்கும் என்று JBS குழுமத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஷானித் ஆசிஃபாலி தெரிவித்துள்ளார். விசுவாசமான வாடிக்கையாளர்களுக்கு பல ஆண்டுகளாக அவர்களின் தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் ஆதரவிற்காக மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.

The post JBS குழுமம் சார்பில் துபாயில் வணிக மேலாண்மை புதிய கிளையைத் திறந்து வைத்தார் : தென்னிந்திய நடிகை ஷம்னா காசிம் appeared first on Dinakaran.

Tags : Business Management ,Dubai ,JBS Group ,Shamna Kasim ,Century Mall ,Al Mamsar, Dubai ,Dr. ,Shanit ,
× RELATED ஆஸ்திரேலியாவில் இருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழப்பு!