×

ஈரான், இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவித்த அதிபர் ட்ரம்புக்கு அமைதிக்கான ‘நோபல் பரிசு’ வழங்க பரிந்துரை

வாஷிங்டன் : ஈரான், இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவித்த அதிபர் ட்ரம்புக்கு அமைதிக்கான ‘நோபல் பரிசு’ வழங்க அமெரிக்க பிரதிநிதி பட்டி கார்டர் பரிந்துரை செய்தார். அதே சமயம் அதிபர் ட்ரம்புக்கு நோபல் பரிசுக்கான தனது பரிந்துரையை உக்ரைன் நாடாளுமன்ற வெளியுறவுக் குழு உறுப்பினர் மெரெஷ்கோவாபஸ் பெற்றுள்ளார். ஈரான்-இஸ்ரேல் போரை அதிபர் டிரம்ப் புத்திசாலித்தனமாக நிறுத்தியதால் அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அமெரிக்க பிரதிநிதி பட்டி கார்டர் பரிந்துரை செய்துள்ளார்.

இதேபோன்ற ஒரு பரிந்துரையை கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் உக்ரைன் நாடாளுமன்ற வெளியுறவுக் குழு உறுப்பினர் மெரெஷ்கோ என்பவரும் செய்திருந்தார். ஆனால், தற்போது அவர் தனது பரிந்துரையை வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை நிறுத்தும் அளவுக்கு ட்ரம்புக்கு திறமை இல்லை என்று கூறி, தனது நோபல் பரிசுக்கான பரிந்துரையை மெரெஷ்கோ வாபஸ் பெற்றுள்ளார். .அமெரிக்க அதிபராக பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் உக்ரைன்-ரஷ்யா போரை நிறுத்துவதாக டிரம்ப் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது உறுதியளித்தார். ஆனால், அவரால் இந்த போரை நிறுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஈரான், இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அறிவித்த அதிபர் ட்ரம்புக்கு அமைதிக்கான ‘நோபல் பரிசு’ வழங்க பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : President Trump ,Iran ,Israel ,Washington ,US ,Representative ,Patty Carter ,Ukrainian parliament ,President Trump… ,President ,Trump ,
× RELATED அடிபணிய மாட்டோம்; எதிர்த்து நிற்போம்;...