
ஈரான்: ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள் 1,000 பேர் வெளியேறுவதற்காக வான்வெளியை அந்நாட்டு அரசு திறந்துள்ளது. ஈரானின் மிகப்பெரிய விமான நிறுவனமான மகான் ஏற்வேஸின் 3 விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர். இஸ்ரேல் தாக்குதல் இல்லாத நகரமான மஸ்சாத் வழியாக இந்திய மாணவர்களை பாதுகாப்பாக அழைத்துவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இஸ்ரேல் உடனான போர் காரணமாக ஈரான் தனது வான்வெளியை மூடிய நிலையில் இந்தியாவின் கோரிக்கையை அடுத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 110 இந்திய மாணவர்கள் நேற்று ஈரானில் இருந்து அர்மேனிய எல்லை வழியாக நாடு திரும்பினர்.
The post ஈரானில் இருந்து இந்திய மாணவர்கள் 1,000 பேர் வெளியேறுவதற்காக வான்வெளியை திறந்துள்ளது அந்நாட்டு அரசு..!! appeared first on Dinakaran.
