சென்னை: தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளதால் இன்று முதல் 5ம் தேதி வரை 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று் எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து தமிழ்நாட்டிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல், கரூர், திருச்சி, வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது. தமிழகப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக இன்று முதல் 5ம் தேதி வரை 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பநிலை: நேற்று இயல்பைவிட 1-3 டிகிரி செல்சியஸ் குறைந்து காணப்பட்டது. வெயில் அதிகபட்சமாக ஈரோட்டில் 104 டிகிரி இருந்தது. கரூர் 102 டிகிரி, வேலூர், சென்னை 100 டிகிரி, நாமக்கல், சேலம், தஞ்சாவூர், திருச்சி, பாளையங்கோட்டை 98 டிகிரி வெயில் காணப்பட்டது. இந்நிலையில் வரும் 6ம் தேதி வரை இயல்பைவிட 1-3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை சற்று அதிகரித்தும், சில இடங்களில் இயல்பை ஒட்டியும் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
The post வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் தென் மேற்கு பருவ மழை தீவிரம் appeared first on Dinakaran.