×

உளவு தகவல்கள் பகிர்வு அவசியம்: அரசு அமைப்புகளுக்கு அறிவுரை


காந்திநகர்: குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள ராஷ்ட்ரிய ரக்ஷா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த காவல்துறை தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழு தலைவர் அலோக் ஜோஷி பங்கேற்று பேசியதாவது: சட்டத்தை நிலைநாட்டுவதில் தொழில்நுட்பம் புதிய புரட்சியை ஏற்படுத்தக்கூடிய முக்கியமான தருணத்தில் இந்தியா உள்ளது. ஆனாலும், இந்த புரட்சியின் வெற்றி, தரவுகளை சேகரித்து பகுப்பாய்வு செய்வதையும், ஏஜென்சிகள், அமைப்புகள் இடையே விரைவாக பகிர்தல், கருத்துக்கள் அடிப்படையில் அமைப்புகளை மறுசீரமைத்தல் ஆகியவற்றை சார்ந்துள்ளது.

இந்தியா எதிர்கொள்ளும் சவால்களில் ஒன்று, அனைத்து அரசு அமைப்புகளும் தனித்தனி குழுக்களாக செயல்படுவது. அந்த தடையை உடைக்க வேண்டும். அனைவரும் அனைத்தும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் சமரசம் செய்யக் கூடாது. எந்த உளவுத்தகவலையும் அரசு அமைப்புகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றார்.

The post உளவு தகவல்கள் பகிர்வு அவசியம்: அரசு அமைப்புகளுக்கு அறிவுரை appeared first on Dinakaran.

Tags : Gandhinagar ,National Security Advisory Committee ,Alok Joshi ,Police Technology Summit ,Rashtriya Raksha University ,Gandhinagar, Gujarat ,Dinakaran ,
× RELATED கேரள உள்ளாட்சித் தேர்தல் : அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை