×

இந்தோனேசியா கல் குவாரி விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு; தொடரும் மீட்புப்பணிகள்!

இந்தோனேசியா கல் குவாரி விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. குவாரி விபத்தில் 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். தொடர்ந்து 4வது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தோனேசியாவின் ஜாவா மாகாணம் சிரேபன் நகரில் சுண்ணாம்பு கல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் கடந்த வெள்ளிக்கிழமை காலை தொழிலாளர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். அப்போது திடீரென கல் குவாரியில் பாறைகள் சரிந்து விபத்துக்குள்ளானது. இதில் குவாரியில் வேலை செய்துவந்த தொழிலாளர்கள் பலர் சிக்கிக்கொண்டனர்.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் 6 பேரை பத்திரமாக மீட்டனர். ஆனாலும், இந்த விபத்தில் ஏற்கனவே 14 பேர் உயிரிழந்த நிலையில் இன்று மேலும் 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதனால் கல் குவாரி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, குவாரி விபத்தில் மேலும் 6 தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். அந்த தொழிலாளர்களை மீட்க இன்று 4வது நாளாக மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விபத்து நடந்து 4 நாட்கள் ஆகும் நிலையில் அந்த 6 தொழிலாளர்களும் உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

 

The post இந்தோனேசியா கல் குவாரி விபத்து; உயிரிழப்பு எண்ணிக்கை 19 ஆக உயர்வு; தொடரும் மீட்புப்பணிகள்! appeared first on Dinakaran.

Tags : Indonesia Quarry Accident ,Cirebon, Java province, Indonesia.… ,Dinakaran ,
× RELATED ஆஸ்திரேலியா துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டவர்கள் தந்தை – மகன்