×

இந்தியா அபார ரன் குவிப்பு

போர்ட் ஆப் ஸ்பெயின், ஜூலை 22: வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 2வது டெஸ்டில், இந்தியா முதல் இன்னிங்சில் அபாரமாக விளையாடி ரன் குவித்தது. குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீசியது. முதல் நாள் ஆட்ட முடிவில் இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 288 ரன் எடுத்திருந்தது. ஜெய்ஸ்வால் 57, கேப்டன் ரோகித் 80, கில் 10, ரகானே 8 ரன்னில் ஆட்டமிழந்தனர். கோஹ்லி 87 ரன், ஜடேஜா 36 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். அபாரமாக விளையாடிய கோஹ்லி சதம் விளாசினார். மறு முனையில் ஜடேஜா அரை சதம் அடித்தார்.

கோஹ்லி – ஜடேஜா ஜோடி 5வது விக்கெட்டுக்கு 159 ரன் சேர்த்தது. கோஹ்லி 121 ரன் (206 பந்து, 11 பவுண்டரி) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். ஜடேஜா 61 ரன் (152 பந்து, 5 பவுண்டரி) எடுத்து ரோச் வேகத்தில் டா சில்வாவிடம் பிடிபட்டார். இந்தியா 108 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 373 ரன் குவித்திருந்தது. இஷான் 18, அஷ்வின் 6 ரன்னுடன் களத்தில் இருந்தனர்.

The post இந்தியா அபார ரன் குவிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Port of Spain ,West Indies ,Dinakaran ,
× RELATED இந்தியா டி அணிக்கு எதிராக 186 ரன்...