×

இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிறது: அமெரிக்கா அதிபர் டிரம்ப்!!

வாஷிங்டன்: இந்தியாவுடன் அமெரிக்கா விரைவில் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளும் என அமெரிக்கா அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். இது குறித்து வெள்ளை மாளிகையில் நடந்த “பிக் பியூட்டிஃபுல் பில்” நிகழ்வில் அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் கூறியதாவது; அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்ள உலக நாடுகள் ஆர்வம் காட்டுகிறதா? என்று கேட்கிறார்கள். அதற்கு, நேற்று தான் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம். நாங்கள் எல்லோருடனும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்போவதில்லை. அதேவேளை சிறந்த ஒப்பந்தங்கள் எங்கள் கைவசம் உள்ளன. அவற்றில் ஒன்று விரைவில் தெரியவரும். அது இந்தியாவுடனான ஒப்பந்தமாக இருக்கலாம், மிகப் பெரிய ஒப்பந்தமாகும்,” என்று டிரம்ப் கூறினார்.

மேலும், எல்லோருடனும் நாங்கள் ஒப்பந்தம் செய்து கொள்ளப்போவதில்லை. சில நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் கடிதத்தை மட்டும்தான் அனுப்புவோம். 25, 35, 45 விழுக்காடு வரி செலுத்த வேண்டும் என்று குறிப்பிடுவோம். அவ்வாறு செய்வது மிகவும் எளிதாகும். நான் அவ்வாறு செய்வதை எனது அரசு தரப்பினர் விரும்பவில்லை. அதை ஓரளவு செயல்படுத்த வேண்டும் என்பது அவர்களின் கருத்து. அதேநேரம், நான் விரும்புவதைவிட அதிகமான ஒப்பந்தங்கள் ஏற்படவேண்டும் என்று அவர்கள் நினைக்கின்றனர். அனைத்து நாடுகளுடனும் அமெரிக்கா நல்ல உறவை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

The post இந்தியாவுடன் விரைவில் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிறது: அமெரிக்கா அதிபர் டிரம்ப்!! appeared first on Dinakaran.

Tags : India ,US ,President Trump ,Washington ,President Donald Trump ,Big Beautiful Bill ,White House ,US… ,US President Trump ,Dinakaran ,
× RELATED பயணத்தடை கட்டுப்பாடுகள் பட்டியலில் மேலும் 20 நாடுகள்: அமெரிக்கா அதிரடி