×

இந்தியாவில் கார் தயாரிக்க ஆர்வம் காட்டாத டெஸ்லா: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டி

டெல்லி: எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் கார் உற்பத்தியை தொடங்க ஆர்வம் காட்டவில்லை என ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். உற்பத்திக்கு பதில் இந்தியாவில் 2 ஷோ ரூம்களை மட்டுமே தொடங்க டெஸ்லா விரும்புகிறது என டெல்லியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தியை ஊக்குவிப்பது தொடர்பான வழிகாட்டுதல்களை வெளியிட்ட பின் ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டியளித்தார். வரி தவிர்ப்புக்காக இந்தியாவில் ஆலை அமைப்பது நியாயமற்றது என ஏற்கனவே டிரம்ப் கூறியிருந்தார்.

 

The post இந்தியாவில் கார் தயாரிக்க ஆர்வம் காட்டாத டெஸ்லா: ஒன்றிய அமைச்சர் குமாரசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Tesla ,India ,Union Minister ,Kumarasamy ,Delhi ,Elon Musk ,Union ,Heavy Industry Minister ,Dinakaran ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்