×
Saravana Stores

சுதந்திர தினத்தையொட்டி நாளை ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: கலெக்டர்கள் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வரும் சுதந்திர தினமான நாளை (15ம்தேதி) காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த, கிராம சபை கூட்டங்களில் கீழ்க்காணும் பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்: அதில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்ட பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்தல், இணையவழி வரி செலுத்தும் சேவை, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், சுயசான்றின் அடிப்படையில் குடியிருப்பு கட்டடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல், தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, தமிழ்நாடு உயிரிப்பல்வகைமை மேலாண்மை குழு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல்ஜீவன் இயக்கம் மற்றும் இதர பொருட்கள் தொடர்பாக கிராம சபை கூட்டத்தில் பகிர்ந்து கொண்டு விவாதிக்கப்படும். மேலும் கிராம ஊராட்சிகள், தங்களது ஊராட்சியில் மேற்கொள்ளப்பட்ட வரவு செலவு கணக்குகளை ஊராட்சி அலுவலகத்தின் தகவல் பலகையில் வெளிப்படுத்திட வேண்டும். பொதுமக்கள் பார்வையிட ஏதுவாக பிளக்ஸ்பேனர் மூலம் வரவு செலவு கணக்கு (படிவம் 30-ன் சுருக்கம்) வைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post சுதந்திர தினத்தையொட்டி நாளை ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்: கலெக்டர்கள் தகவல் appeared first on Dinakaran.

Tags : Gram Sabha ,Independence Day ,Kanchipuram ,Chengalpattu ,panchayats ,Dinakaran ,
× RELATED முதல்வர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் நவ.20 வரை விண்ணப்பிக்கலாம்!