×

தமிழகத்தில் நேற்று 21,228 பேர் பாதிப்பு: 19 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்

சென்னை: தமிழகத்தில் நேற்று 21,228 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் கொரோனா பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 19,112 பேர் வீடு திரும்பினர்.  இது குறித்து மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,40,512 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் 21,228 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று  சென்னையில் மட்டும் 6,228 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,49,292 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 12,450 பேர் ஆண்கள், பெண்கள் 8,778 பேர் ஆவர். மருத்துவமனைகளில்  சிகிச்சை பெற்று வந்த 19,112 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1,25,230 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 144 பேர் நேற்று உயிரிழந்தனர். இதில் 58 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 86 பேர் அரசு மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர். இதையடுத்து மொத்தம் 14,612 பேர்  உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் மட்டும் 36 பேர் நேற்று  உயிரிழந்தனர்.

நேற்றைய மொத்த பாதிப்பில் அதிக பட்சமாக சென்னையில் 6,228 பேர், செங்கல்பட்டு 1,608, கோவை 1,509, கடலூர் 305, தருமபுரி 263, திண்டுக்கல் 167, ஈரோடு 585, கள்ளக்குறிச்சி 146, காஞ்சிபுரம் 594, கன்னியாகுமரி 526, கரூர் 264,  கிருஷ்ணகிரி 305, மதுரை 787, நாகப்பட்டினம் 392, நாமக்கல் 328, நீலகிரி 116, ராணிப்பேட்டை 747, சேலம் 624, சிவகங்கை 135, தென்காசி 129, தஞ்சாவூர் 454, தேனி 187, திருப்பத்தூர் 119, திருவள்ளூர் 1,152 திருவண்ணாமலை 224, திருவாரூர்  129, தூத்துக்குடி 358, நெல்லை 719, திருப்பூர் 494, திருச்சி 440, வேலூர் 475, விழுப்புரம் 196, விருதுநகர் 295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu , In Tamil Nadu, 21,228 people were affected yesterday: 19 thousand returned home after receiving treatment
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...