×

பிரபல ஹோட்டலில் தரமற்ற உணவு விற்பனை: கிரில் சிக்கன் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரும் மருத்துவமனையில் அனுமதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உணவகத்தில் கிரில் சிக்கன் சாப்பிட்ட 8 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டன. திருவண்ணாமலையை சேர்ந்த மோகன் என்பவர் தனது குடும்பத்தினருடன் ஊரப்பாக்கத்தில் செயல்படும் பிரபல அசைவ உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அனைவரும் சிக்கன் நூடுல்ஸ், கிரில் சிக்கனை சாப்பிட்டுள்ளனர். பின்னர் வீற்றிருக்கு சென்றபோது வயிற்று வலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்ததன் பெயரில் போலீசார் விசாரணை நடத்தி உணவு பாதுகாப்புத்துறையில் புகார் அளிக்க அறிவுறுத்தினர். இதேபோல் வரதராஜ புரத்தை சேர்ந்த காதர் பாட்ஷா என்பவர் தனது குடும்பத்தினருடன் இதே உணவகத்திற்கு சென்று சாப்பிட்டதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றன. ஊரப்பாக்கத்தில் செயல்படும் இந்த உணவகத்தில் தரமற்ற உணவு விற்பனையால் இதுவரை 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க பாதிக்கப்பட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பிரபல ஹோட்டலில் தரமற்ற உணவு விற்பனை: கிரில் சிக்கன் சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேரும் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Vandalur, Chengalpattu district ,Dinakaran ,
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்கா சுற்று...