×

ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டவை அனைத்தும் தவறான மற்றும் போலியான குற்றச்சாட்டுகள்: அதானி விளக்கம்

டெல்லி: ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டவை அனைத்தும் தவறான மற்றும் போலியான குற்றச்சாட்டுகள் என அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி விளக்கம் அளித்துள்ளார்.

அதானி குழுமத்தில் கணக்கு மோசடி மற்றும் பங்கு விலைக் கையாளுதல் ஆகியவற்றைக் குற்றம்சாட்டி, அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச், கடந்த ஜனவரி மாதம் அறிக்கையை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது ஹிண்டன்பர்க் அறிக்கை குறித்து கௌதம் அதானி கூறியுள்ளதாவது;

“ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டவை அனைத்தும் தவறான மற்றும் போலியான குற்றச்சாட்டுகள். ஹிண்டன்பார்க் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்திற்கும் சட்டப்படி தீர்வு காணப்பட்டுள்ளது. அதானியின் செயற்பாட்டில் எந்த தவறும் இல்லை என உச்ச நீதிமன்றம் அமைத்த வல்லுநர் குழு தெரிவித்திருக்கிறது.

எங்கள் நிர்வாகத்தின் தரம் மீது அசாத்திய நம்பிக்கை இருக்கிறது. அதானி நிறுவனத்தின் பெயருக்கு களங்கம் விளைவிக்கவே அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நமது பங்குகளின் விலைகளை குறுகிய காலத்தில் விற்று லாபம் ஈட்டுவதற்காகத்தான் ஹிண்டன்பெர்க் அறிக்கை வெளியிடப்பட்டது” என அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி விளக்கம் அளித்துள்ளார்.

The post ஹிண்டன்பர்க் அறிக்கையில் கூறப்பட்டவை அனைத்தும் தவறான மற்றும் போலியான குற்றச்சாட்டுகள்: அதானி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Hindenburg ,Adani ,Delhi ,Adani Group ,Gautam Adani ,Dinakaran ,
× RELATED அம்பானி, அதானிக்கு உதவவே பரமாத்மா...