×

கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!!

நாமக்கல் : கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா தெரிவித்துள்ளார். குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை ஐ.ஜி. ரூபேஷ் குமார் மீனா நாமக்கல்லில் அளித்த பேட்டியில், “தமிழ்நாட்டில் ரேஷன் அரிசி கடத்தல் குறைந்துள்ளது; கடத்தல் வழக்கில் 56 மீது குண்டாஸ் பாய்ந்துள்ளது. நடப்பாண்டில் ரூ.1.06 கோடி மதிப்புள்ள 878 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post கோழிப் பண்ணைகளில் ரேஷன் அரிசி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை!! appeared first on Dinakaran.

Tags : NAMAKAL ,G. Rupesh Kumar Meena ,Civil Material Supply Criminal Investigation Department ,I. G. ,Rubesh Kumar Meena Namakkal ,Tamil Nadu ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்